1. www.blogger.com என்ற தளத்திற்கு செல்லவும், முதற்கட்டமாக நீஙகள் கூகிள் அக்கௌன்ட் வைத்திருப்பவராக இருந்தால் உங்களுடய கூகிள் Username மற்றும்  Password உதவியுடன் லாகின் செய்யவும்.
அல்லது  அங்கு உள்ள Create  Your Blog Now என்ற பட்டனை கிளிக் செய்யவும். இங்கு தோன்றும் படிவத்தை முறையாக பதிவு செய்யவும்.
2. இப்போது இரண்டாவது கட்டமாக  உங்களுடய Blog Title மற்றும் உங்களுடய பிளாக்கின் பெயரை பதிவு செய்யவும். உதரணமாக tamilohtamil.blogspot.com என்று தேர்வு  செய்யலாம். பின்பு continue என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
3. மூன்றாவது கட்டமாக, உங்கள் பிளாக்கிற்கான டெம்ப்ளேட்டை தேர்வு செய்யவும். பின்பு Continue  என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Your blog has been created!  என்ற மெசேஜ் உடன் வரும் பக்கத்தில் “Start Blogging” என்ற பட்டனை கிளிக் செய்யவும். இப்போது உங்களுடய பிளாக்கினுடைய Control Panel தோன்றும். இங்கிருந்து நீஙகள் உங்கள் பிளாக்கை நிர்வகிக்கலாம். இப்போது yourname.blogspot.com என்பது உங்களுடய பிளாக்கின் வெப் முகவரி ஆகும்.
நீஙகள் மேலும் உதவிக்கு பிளாக்கர் உடைய Help  பக்கத்தை பார்க்கவும். இதன் Control panel முழுவதும் ஆங்கிலத்தில் இருந்தாலும் முழுமையாக நீஙகள் தமிழினை பதிவு செய்யலாம்.
இத்துடன் தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் பகுதி முடிவடைகிறது. .
உங்களுடைய கருத்துக்களை நீஙகள் “Comments” பகுதியில் தெரிவிக்கலாம்.